Friday, November 28, 2014

சுயநலங்கள் சுக்கு நுாறாகிப் போகட்டும்

-ஓடையூர் பாதுஷா-

ஈமானில்லா
ஈனப் பிறவிகளா நீங்கள்
இன்னுமேன் தயங்குகிறீர்கள்
தன் மானங்ககாக்க
துணிவில்லா உங்களுக்கு
தலைவர் பதவி என்ன இழவுக்கு...

துணிந்தவனுக்கு துாக்கு மேடை துாசு
மாற்றான் படைகண்டு
பயந்து நடுங்கினால்
தோற்றான் தலைவனென்று
மார் தட்டி மகிழ்வர்
மடையர் கூட்டம்.




விலாங்கு போல
வீனாய் ஏன் நெளிகிறீர்கள்
எம்.பி பதவி கவசத்தை
நெஞ்சில் சுமந்து கொண்டு
தம்பிகளே தடை தாண்டுங்கள்
ஊழல் மலையெல்லாம்
ஊதித்தள்ளுங்கள்
உயர்வு பெறுவீர்கள்

ஏமாற்றிய காலமும்
ஏமாறிய காலமும்
மலையேறி
பல நாளாச்சு
உரைக்கின்ற
உண்மைக்கு மட்டும்
உறைவிடம் இங்குண்டு

குறைக்கின்ற
நாய்களுக்கு
கல்லடிக்கும் துணிவுமுண்டு
பொல்லடிக்குப் பயந்து
சொல்லடி இங்கே
குறையாது.

சால்லையைக் கண்டு
போர்வையைக் கழட்டும்
அடிமைத்தனம் இனியும் நடக்காது
முஸ்லிம்களின் உணர்வுகளை
இனியும் அடக்கி ஆழ இயலாது

புறமுதுகு காட்டாமல் புறப்படுங்கள்
புதுயுகம் பிறக்கட்டும்
ஏழைகளாய் வாழலாம்
கோழைகளாய் வாழ அனுமதிக்கவில்லை
இஸ்லாம்.

தன்வாசிக்காய் தலையாட்டும்
தரங் கெட்ட அரசியலை
தன்மானமுள்ள எவனும்
அனுமதிக்க மாட்டான்

மக்களுக்காகத்தான் கட்சி
கட்சிக்காக மக்களில்லை
என்றுணரும் காலமிது.

காலங்கடந்து ஞானம் பிறந்து பயனில்லை
காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ள
துனிவோடு முடிவெடுங்கள்
வெற்றிக் கம்பத்தை நோக்கி
வீறுநடை போடுங்கள்
காலமும் நேரமும்
விறைவாய் போகிறது
அதை விரயமாக்காமல்
நெஞ்சு நிமிர்த்தி
நேர் செல்லுங்கள்

சுயநலங்கள் சுக்கு நுாறாகிப் போகட்டும்

கூடிப் பேசி முடிவெடுக்க
நாடி பிடித்து சோதிடம் சொல்ல
இனியும் உங்களால் முடியாது
காலங்கடத்தாமல்
காரியத்தில் இறங்குங்கள்

கடமை காத்துக் கிடக்கிறது
சந்தர்ப்பம் சந்தி நின்று கூவுகிறது
மூலைக்குள் முடங்கிக் கிடக்க
முக்காடு போட்டவர்களல்ல நீங்கள்

Thursday, August 15, 2013

இது ஷஹீதுகளின் காலம்...


 இக்ரம் நஸீர்

ஷஹாதத்தை வாசித்திருக்கிறேன்...
ஷஹாதத்தை ஓதியிருக்கிறேன்...
ஷஹாதத்தை பேசியிருக்கிறேன்...
ஷஹாதத்தை பிரார்த்திருக்கிறேன்...
உள்ளத்தின் ஆழம் என்று எவ்வளவு புக முடியுமோ ...
அவ்வளவு சென்று பிரார்த்திருக்கிறேன்...
றன்தீஸியை பார்த்துப் பார்த்து அதனை பருகியிருக்கிறேன்...
அய்யாஷை வாசித்து வாசித்து          அதனை உருவகப் படுத்தியிருக்கிறேன்...

அந்தப் பெயரை வைத்தால் நாம் பல ஷஹீதுகளை கொடுக்கவரும் என்ற போது உள்ளத்தால் புன்னகைத்திருக்கிறேன்...
ஆனால்,அது முஸ்அபின் வடிவில் என்னுள் குடிகொள்ளும் என கணவிலும் எண்ணவில்லை...
உண்மையை அறிவதற்கும் உணர்வதற்குமிடையே வேறுபாடுள்ளது என்ற ஷஹீத் குதுபின் வார்த்தை எத்துனை உண்மையானது...
முஸ்அப் ஷஹாதத்தை என்னுள் குடியமர்த்திய ஆன்மா...
அவன் ஒரு ஷஹீத்...அது ஒரு முஸ்லிமின் உயர் அந்தஸ்த்து...
நபிமார்கள் கூட யாசித்தது...
ஷஹீதின் கரங்களை முஸாபகா செய்த என் கரங்கள் இனம் புரியா உணர்வுகளால் மணக்கின்றன...
அவனை முஆனகா செய்த உடம்புக்குள் அவன் குடியேறுவதாய் ஒரு உணர்வு...
ஷஹாதத் என்னில் குடியேறுகிறது...
இனம் புரியாத மின்சார அலைகள் என்னை ஆட் கொள்கின்றன...
எனது மகனின் நெற்றியில் முத்தமிடுகிறேன்...
அவனும் அதற்காய் பிறந்தவன்...
அவனை அதற்காய் எடுத்துக் கொள்ளுமாறு ஸுஜுதில் அல்லாஹ்விடம் அடிக்கடி உடன்படிக்கை செய்து கொள்கிறேன்...
அவனுக்கு நான் மரணத்தை கற்றுக் கொடுக்க மரண வீடுகளுக்கு அழைத்துச் செல்ல பலமுறை முயற்சித்தேன்...அழைத்தால் ஓடி வரும் அவன் அதற்கு வரவில்லை...
ஆனால் நேற்று ”மௌத்து” என்ற சொல்லை கற்றுக் கொண்டான்...அவன் ஷஹீதுகளிடமிருந்துதான் அதனை கற்பேன் என பிடிவாதமாய் இருந்திருக்கிறான்...
..............................................................
           

ஷஹாதத் இழப்பு அல்ல வெற்றி...
அதுதான் பெரும் வெற்றி...
அவர்கள் அதனை எதிர்பார்த்தார்கள்...அடைந்து கொண்டார்கள்...
அவர்கள் முர்ஸியை காண்பதில் கொண்ட ஆவலைப் பார்க்கிலும் அல்லாஹ்வை காண ஆவல் கொண்டார்கள்...கண்டு கொண்டார்கள்...
ஷஹாதத் பட்டம் வாங்க பலஸ்தீனுக்குத்தான் போக வேண்டுமா?...
அதனை எத்தனை முறை அவர்கள் கேட்டிருப்பார்கள்!...
அல்லாஹ் அதனை அவர்களது கால்களுக்குக் கீழாலே கொண்டு வந்து கொடுத்துவிட்டான்...
சுவனத்து சோலையில் அவர்களது திருமணநாளிது...
யாஅல்லாஹ் உனது கணீப்பீடுகள் அற்புதமானவை...
அதிகாலைக் குரஆன் ஸுரா மாஇதாவின் இறுதி வசனங்களாய் இறங்கியது...
“நீ அவர்களை தண்டித்தாலும் மன்னித்தாலும் அவர்கள் உனது அடியார்கள்...நீதான் பலமும் ஞானமும் கொண்டவன்|அல்லாஹ் கூறினான்:இன்று உண்மையாளர்களின் உண்மை அவர்களுக்கு பிரயோசனமளிக்கும் தினம்...அவர்களுக்கு ஆறுகள் கீழால் ஓடும் சுவனபதிகள் சொந்தமானது...அதில் அவர்கள் நிரந்தரமாய் இருப்பர்...அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்ட நிலையிலும் அவர்கள் அல்லாஹ்வைில் திருப்தியுற்ற நிலையிலுமிருப்பர்...அதுதான் மகத்தான வெற்றி|வானங்கள் புமியும் அவற்றிலுள்ளவைகளும் அல்லாஹ்வுக்குறியது...அவன் அனைத்துக்கும் ஆற்றல் படைத்தவன்”

......................................................................
றாபிஆ ஷஹாதத்தின் குறியீடு...
ஷஹீதுகளின் இரத்தம் இம்மையிலோ,மறுமையிலோ வீணாகிவிடமாட்டாது...
அவர்கள் சாவை விரும்புபவர்களல்லர் வாழ்வை விரும்புபவர்கள்...ஆனால் அது நிரந்தர வாழ்வு...நித்திய வாழ்வு...உண்மை வாழ்வு...
சுவனப் புங்காவில் அவர்கள் அனைவரையும் சந்தித்திருப்பர்...
பலஸ்தீன் எப்படி வாழ்கிறது எனத்தெரியுமா?...
அது இப்படித்தான்...ஷஹாதத்தில் வாழ்கிறது...
ஷஹாதத் மரணமல்ல வாழ்வு...ஷஹாதத் தோல்வியல்ல வெற்றி...
எகிப்திய போராட்டம் வென்று விட்டதாக சொல்லுங்கள்...
அதற்கு இனிமேல் தோல்வியே கிடையாது....
ஒரு சில மணித்தியாலங்களுள் இத்துணை பெரும் வெற்றியை தந்த போராட்டம் மரணித்துப் போகுமா?!...

Friday, April 19, 2013

விட்டுக் கொடுப்பும், சகிப்புத் தன்மையும் - சகோதரத்துவத்தின் அடிப்படைப் பண்புகள்

இஸ்லாம் உயர் பண்பாடுகளின் மார்க்கம். மனிதர்களைப் புனிதர்களாகச் செதுக்கும் ஓர் சிற்பி. அதன் கொள்கை கோட்பாடுகள் அத்தனைக்குள்ளும் உயர் பண்பாட்டு விழுமியங்கள் செறிந்து காணப்படுகின்றன.

அந்தவகையில் சகோதரத்துவத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகவும், குடும்ப வாழ்வின் நீட்சிக்கும், சுபீட்சத்திற்கும் பங்களிக்கும் காரணியாகவும் இருக்கும் ஒரு பண்பே விட்டுக் கொடுப்பும், சகிப்புத் தண்மையுமாகும்.

உண்மையில் சில உயர் பண்பாடுகளைப் பொருத்தவரையில் அவைகளை நடைமுறைப் படுத்துவது என்பது பாகற்காயை சாப்பிடுவது போன்றதாகும். எல்லோராலும் சாத்தியப்படுத்துவது கடிணம். அதன் உடணடி பலனை எதிர்பார்க்காமல் பொருமையாக நடைமுறை வாழ்விற்கு கொண்டுவரும் போது அதன் விளைவு சாதகமானதாகவே காணப்படும்.

குறிப்பாக குடும்பவாழ்விலும் பொதுவாக தணிமனிதர்களுக்கிடையிலும் இப்பண்பு இருக்கும் காலமெல்லாம் பரஸ்பர அன்பும், சுபீட்சமும் என்றும் இருக்கும். மாறான முன்கோபமும், பிடிவாதமும் நிலைகொண்டால் நிலமை திசைமாறும்.

பண்பாட்டுச் சீலர் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் போதுமானளவு முன்மாதிரிகளை இப்பண்பிற்கு உதாரணங்கான முடியும்.
அவைகளை அடுத்த சந்திப்பில்
பேசுவோம்